பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியிருக்கிறார். பாரதியை முதல் புதுக்கவிஞன் என்று இலக்கணத்தை மீறிய கவிஞன் என்று சொல்லிவிட முடியாது. பாரதி இலக்கணத்துக்கு ரொம்ப மரியாதை கொடுத்து, அதற்குப் பயந்துகொண்டு எழுதின மாதிரிதான் தோன்றுகிறது. இருந்தாலும் அதே நேரம் அவருக்குள் சோதனை முயற்சி என்கிற ஆர்வமும் இருந்திருக்கிறது. உலகத்தின் பிற இலக்கியங்களில் பல்வேறு விதமான சோதனை முயற்சிகளையெல்லாம் அவர் அறிந்து வைத்திருந்தார். ஷெல்லியைப் பற்றி, வால்ட் விட்மனைப் பற்றி, ஹைகூ கவிதைகளைப் பற்றியெல்லாம் தன் கட்டுரைகளில் அவர் குறிப்பிடுவதைக்காண்கிறோம். மீரா: இல்லை. இலக்கணத்தை மீறவேண்டும் என்பதைப் பாரதி ஒரு நோக்கமாகக் கொண்டிருக்க வில்லை. எதைச் சொல்ல வேண்டும் என்று அவர் நினைத்தாரோ, அதற்கு இலக்கணம் ஒரு தடையாக இல்லை. அகவலிலும் சொன்னார். சிந்து வகையிலும், கண்ணி வகையிலும் சொன்னார். அவரால் எல்லா வடிவத்திலும் சொல்ல முடிந்தது. எந்த வடிவத்திலும் சொல்ல முடிந்த அவருக்கு இலக்கணத்தை மீற வேண்டிய அவசியமே ஏற்படவில்லை என்றுதான் கூறவேண்டும். இன்றைக்குப் புது இலக்கிய வகைகள் எல்லாம் ஏற்பட்டு, வசனத்திலேயே சொல்லிவிடலாம் என்று நாம் நினைக்கிறபோது வசன கவிதை, புதுக்கவிதை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். இது வசனத்தின் செல்வாக்கான காலம். பாரதியின் 24