பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தில் எரியும் பிரச்னைகளைப் பற்றிப்பாடுவதற்கு சந்தமும் யாப்பும் அவருக்குத் துணையாகத்தான் இருந்திருக்கிறது. பாலா. அதுமட்டுமல்ல. இன்றைய கால கட்டத்தைப் போல பத்திரிகைகள் வேகமாகவும் அதிகமாகவும் பாரதி காலத்தில் ஜனங்களிடம் செல்லவில்லை. The Age of Prose" பிற்பாடுதான் வருகிறது. கவிதை என்பது செத்துப் போய்விட்டது... இனி கவிதைகளை எழுதாதே..! என்று சொல்கிறவர்கள் எல்லாம் என்ன நினைக்கிறார்கள் என்றால் "கவிதை என்பது இலக்கணத்தில் எழுதப்படுவது... இப்போது வசனத்தின் காலம்தான். கவிதையின் காலம் கிடையாது. கவிதை செத்துப் போய்விட்டது. வா.. கதை எழுதலாம்...' என்கிறார்கள். என்ன பெரிய புதுக்கவிதை? "குப்பனும் குளிக்கப் போனான் கூடவேநானும்போனேன் எப்படா வந்தாய் என்றான் இப்பத்தான் வந்தேன் என்றான்." என்று இதுதானே? இதெல்லாம் கவிதையா?" என்று கிண்டல் செய்கிறார்களே, - - மீரா: நீங்க சொல்கிற மாதிரி 'குப்பனும் குளிக்கப் போனான் கூடவே நானும் போனேன்' என்ற கவிதை கூட ஒரு மீட்டரில்தான் இருக்கிறது. மீட்டரைக் 35