பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடியும். கவிதைக்கு உடனடி Effect என்பது இந்த காட்சித்தன்மைதான். பாலா: 'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று சொன்னவுடன் நமக்கு உடனடியாக நம் கண் முன் வருவது அந்தக் காட்சிதானே. ராமன் கீழே நிற்கிறான். சீதை மேன் மாடத்தில் நிற்கிறாள். இருவரும் பார்த்துக்கொள்கிற ஒரு காட்சியை கம்பன் கொடுத்து விட்டான். ஆக இந்தக் கவிதை காட்சி வடிவத்தில் அமைந்து விட்டதால்தான் கால காலத்திற்கும் நிலைத்து வந்திருக்கிறது. இரா.வே.: பாரதிதாசன் அருவிகள் வயிரத் தொங்கல்' என்னும்போதுகூட இந்தக் காட்சிய மைப்புத் தான் நம் கண்முன் வருகிறது. வயிரத் தொங்கல் என்கிற Coimage-ல் இரண்டு விஷயத்தைச் சொல்லி விடுகிறார். பாலா: ஆமாம். அருவி என்று சொன்னவுடன் இந்த இரண்டு விஷயம்தான் வரும். ஒன்று அதன் நிறம். White Radiance. இன்னொன்று அதன் இயல்பு. இது வீழ்கிற போது தொங்கல் என்ற வார்த்தையிலிருந்து தான் அருவியின் Liquidity நீர்மைத் தன்மை கிடைக்கிறது. வயிரம் என்பதில் அருவியின் நிறமும் அதன் வீச்சும் நம் கண்முன் விரிகிறது. இந்த வயிரத் தொங்கல் என்கிற தொடரில் அருவியின் நிறத்தையும், அதன் இயல்பான நீர்மைத் தன்மையையும் சொல்லிவிடுகிறார். ஆக, சொல்கிற முறையில் கவித்துவம் வேண்டும். கவித்துவம் 39