பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஷயத்தையும் முழுமையாகச் சொல்லாமல் அதைப் பற்றி நினைக்க வைத்துவிடுவது. எதையும் முழுமையாகச் சொல்லாமல் அதற்கான வாசலைத் திறந்துவிட்டு விடுவது, ஒரு நல்ல உத்தி. இந்த 'Suggestiveness சங்க இலக்கியங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியவை. இரண்டாவது Concentration, செறிவாகச் சொல்லிவிடுவது. இன்றையப் புதுக் கவிதைகளில் இந்த குறிப்பு-செறிவு இரண்டும் எல்லா மொழிகளிலும் முக்கிய இடம் வகிக்கிறது. 'ரொம்ப நீளமாஒரு விஷயத்தைச்சொல்வதைவிட, கொஞ்சமாகச் சொல்லி நிறைய நினைக்க வைத்துவிடுவது. அதிகம் சொல்லிக் கொஞ்சமாகச் சிந்திக்கவைப்பதை விடவும் கொஞ்சமாகச் சொல்லி நிறையச் சிந்திக்க வைத்துவிட வேண்டும். சில வார்த்தைகளிலேயே நிறையச் சொல்லிவிட முடியும் என்கிறTradition நமக்கு இருக்கிறது. வார்த்தைகளை வீணடிக்கக் கூடாது. மீரா: தற்போதுள்ள கவிஞர்கள் சில வார்த்தைகளை வேகமாகச் சொல்லி விட்டு அதை மட்டுமே பெரிய கவிதை என்று நினைக்கிறார்கள். உதாரணத்திற்கு, நாங்கள் - சேற்றில் கால் வைக்காவிட்டால் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியாது. நீங்கள் ஏற்கெனவே சொன்ன