பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'நாற்று நடும் அவள் பாட்டில் மட்டுதோன் சேறு படியாமல் இருக்கிறது’ என்றுSuggestive -ஆகச்சொன்னதற்கும் சேற்றில் கால்வைக்காவிட்டால் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியாது.' என்று Statement மாதிரி சொல்வதற்கும் உள்ள வேறுபாட்டை ஒப்புநோக்கில் பார்க்கும்போது தான் இளங்கிவிஞன் ஒருவன்தான் எப்படி எழுதவேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். - பாலா: இந்தக் கவிதை கருத்தின் மூலமாகத்தான் நம்மைக்கவர முயற்சிக்கிறது. - 'இரவிலே வாங்கினோம். இன்னும் விடியவேயில்லை...' என்ற கவிதையை இது வெறும் Statement தானே... இதில் என்ன கவிதை இருக்கிறது என்கிறார்கள். இரவு... விடியல்... என்கிற இரண்டு முரணான விஷயங்கள் இதைக் கவிதையாக்க முயற்சிக்கிறது. இதுக்கும் மேலே கவித்துவத்தோடும் இருக்க வேண்டும். கருத்தின் பலம் கவித்துவத்தின் பலத்தையும் மீறி இருக்க வேண்டும். அப்போதுதான் கவிதைக்குரிய கெளரவம் அந்தஸ்து கிடைக்கக்கூடும். சொல்லப் போனால் நல்லகவிதை ஒரு கைகாட்டிமரம்