பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்கிறோம். ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு கருத்தைப் பிரதானப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறோம். சங்க இலக்கியக் காலத்தில் காதலும் வீரமும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த சமூகத்திற்கு வீரம் என்பது தவிர்க்க இயலாத முக்கியமான அம்சம். நாடுகளை ஜெயிக்கக்கூடிய முடியரசு இருந்தபோது ஒரு சமுதாயத்தை வீரமுள்ள சமுதாயமாக மாற்ற வேண்டிய கட்டாயம் அந்தக் கால கட்டத்தின் கவிஞனுக்கு ஏற்பட்டது. தன்னுடைய நாட்டைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதற்கு, தனது ஊர், தனது சொத்துக்களைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதற்கு உடல் வலு (Physical Valour) தேவைப்பட்ட காலமானதால் வீரம்.அக்காலத்தில் முன் வைக்கப்பட்ட விஷயமாயிற்று. நிலவுடைமைச் சமூகத்தில் ஒரு தனிப்பட்ட வீரனைக் கெளரவிப்பதென்பது தேவையான செய்தியாக இருந்திருக்கிறது. இது மாதிரி ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு செய்தி முக்கியமாக இருந்திருக்கிறது. மீரா: சுரதாவின் கவிதைகளில் இந்த மாதிரியான செய்திகள் இல்லை என்கிறீர்களாபாலா. பாலா.: ஆமாம். இந்த மாதிரியான வாழ்க்கைச் செய்திகள் அதில் இல்லை. அப்படி ஏதாவது இருக்கிற தென்றாலும் அது பாரதிதாசனின் எதிரொலி. மாதிரிதான் இருக்கிறது. அவருடைய காலத்தின் பிரச்னை களை அவர் சந்திக்கவேயில்லை. இந்த யுகத்தில், இந்த மனுஷனுடைய பிரச்னைகளை அவர் 49