பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். அவருடைய தேன் மழைகள் என்ற தொகுப்பைப் பார்த்தால் அதில் அவர் தன்னை ஒரு கவிஞனாக ஸ்தாபித்துக் கொள்கிற வேகம்தான் தெரிகிறதே தவிர, தமிழ்நாட்டினுடைய கவியாகத்தான் திகழவேண்டும் என்று பாரதிக்கிருந்த தாகம் - வேகம் இருந்ததாகத் தெரியவில்லை. - மீரா பொதுப் பிரச்னைகளையும் அவர் சொல்லித் தானிருக்கிறார். சமூக சீர்திருத்தம், ஜாதி ஒழிப்பு, கலப்புத் திருமணம் போன்ற விஷயங்களையும் அவர் கவிதைகள் எழுதியிருக்கிறார். ஆனால் பாரதி, பாரதிதாசன் மாதிரி, அகன்ற பார்வையோடும், தீர்க்கத்தோடும் இயக்கரீதியான பலத்தோடும் அவர் சொல்லவில்லை. கவிதையை உயிர் மூச்சாக அவர் வைத்துக் கொள்ளவில்லை. இதற்குக் காரணம் தற்போதுள்ள இயக்கங்களும் என்று கூடச் சொல்லலாம். ஒரு பெரிய அரசியல் இயக்கத்தோடு இணைந்து கொண்டு அதிலேயே ஈடுபட்டுப் பாடுகிற சூழ்நிலை இல்லாததும் காரணமாக இருக்கலாம். பாலா. நல்ல கவிதை என்றால் வழங்குவதற்கான செய்தி வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்துடன் @@##73, Gassis(\th. A good poet is a poet of good ideas அழகியல், கவித்துவத் திறமைகளைக் கூட நாம் வெளியிலிருந்துக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் சிந்தனை, ஒரு கவிஞனுக்கு அவனுள்ளிருந்துதானே வெளிப்பட வேண்டும்! 50