பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் புலவன் ஒருவன் ஒரு எருமையைப் பற்றிச் சொல்கிற போது "இரும்பியன்றன்ன - கருங்கோட்டெருமை." என்று கூறுவான். இந்த வரியில் அவன் மூன்று விஷயங்களைச் சொல்லிவிடுகிறான். ஒன்று இரும்பையொத்த அதன் நிறம். இரண்டாவது இரும்பினை ஒத்த அதன் வலிமை... மூன்றாவது இரும்பு மாதிரியானஒர்கூரான ஆயுதம். இப்பாடலை ஒரு டெக்னிக்காக வைத்துக் கொண்டு இதே உவமையை நாம் கடன் வாங்கிச் செய்துவிட முடியும். ஆனால் அந்தப் பாடலின் கருத்து இருக்கிறதே, அது அவன்கருத்தல்லவா? மீரா: கவித்துவமும் இருக்க வேண்டும். அதே சமயத்தில் உள்ளடக்கமும் நல்ல செய்திகளும் இருக்க வேண்டும். 'கவித்துவம் மட்டுமே போதும் அலங்காரத்தோடு சொன்னால் போதும், என்று எண்ணக் கூடாது. வீடென்றால் அதற்கு வெளிச்சம் மட்டும் போதாது. தூய்மையாகவும் இருக்க வேண்டும். இப்படி இரண்டும் சேர்ந்து இணைந்திருக்க வேண்டும். மின்சாரம் என்றால் 'நெகடிவ், பாஸிடிவ்' என்று இருப்பதுபோல கவிதையிலும் கவித்துவமும் உள்ளடக்கமும் இருந்தாக வேண்டும். வெறும் கவித்துவம் மட்டுமே உள்ள கவிதை நிற்காது. வெறும் உள்ளடக்கம் மட்டுமே உள்ள கவிதையும் நிற்காது. கவித்துவம் இல்லாமல் போனால் உள்ளடக்கம் மட்டும்