பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறும் பிரசாரமாகி விடுகிறது. கவித்துவத்தோடு சொன்னால் அது இலக்கியமாகி விடுகிறது. பாலா: கவிதையின் உள்ளடக்கத்தைப் பொறுத்த வரையிலும் ஒன்று: தனிமனிதனின் பிரச்னைகளைப் பற்றி மட்டும் பாடி விடுவது. கவிமணி சிரங்கு . வந்ததைப் பற்றி சிரங்கப்பராயா சற்று இரங்கப்பா.. என்று பாடியது மாதிரி. - மீரா: தனிமனித பிரச்னைகளைப் பாடியது தமிழுக்குப் புதிதில்லை. சீத்தலைச்சாத்தனார் பசியின் கொடுமையைப் பற்றிப் பாடியிருக்கிறார். 'நாராய் நாராய் செங்கால் நாராய்' என்ற பாடலைப் பாடிய சங்கப்புலவன் ஒருவன்.தனது ஏழ்மையையும், குளிரில் வாடியதையும் பாடியிருக் கிறான். பசி பொதுவான விஷயம்தான். அதையே கவித்துவத்தோடு சொல்கிறபோது அது இலக்கியமாகி விடுகிறது. இந்த கவிஞர்தமிழவன் ஒரு கவிதையிலே இரவின் நட்சத்திரங்கள் எங்கே போயிற்று ... ? இந்த மரத்தின் பூக்களெல்லாம் ஏன்கருகிற்று..? கண்களுக்கு ரெண்டு நாள் பட்டினியை ஜீரணிக்க முடியலையோ...? l என்று பாடியிருக்கிறார். இந்தக் கவிதையிலே பசியின் Density என்கிறோமே. கொடுமை எல்லாவற்றையும்