பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரொம்ப அருமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பசி என்கிறதை இல்லாமல் செய்யவேண்டும். அந்தக் கொடுமையை ஒழிக்க வேண்டும் என்று இதைப் படித்தவுடன் நமக்குத் தோன்றுகிறது. அந்த நோக்கத்துக்கான தீவிரமான உந்துதலை நமக்குள் ஏற்படுத்துகிறது. பிரச்சாரம் செய்வதாக இருந்தாலும், இந்த மாதிரி ஒரு கருத்தை வலியுறுத்துவதாக இருந்தாலும் கவித்துவத்தோடு செய்தால்தான்மனதில் நிகழ்ந்து நிற்க முடியும். பாலா. வாழ்க்கையில சில சமயங்களிலே சின்ன முயற்சி எடுத்தாலும் கூட பெரிய வெற்றி வந்து சேரும் என்பதை கலீல் ஜிப்ரான் "நம்மில் கிழங்கு வெட்டப் போய் புதையல் எடுத்தவர்கள் இல்லையா...?' என்று நயமாகக் குறிப்பிடுவார். கிழங்கு வெட்டப் போகும் போது என்று ஒரு இயல்பான சின்ன முயற்சியைக் குறிப்பிட்டு, எதிர்பாராத விதமாக வாழ்க்கையின் வெற்றியாக புதையல் எடுத்ததைக் குறிப்பிடுகிறார். இந்த விஷயத்தைக் குறிப்பிடு வதற்காக எடுத்துக் கொண்ட உவமையும், சொன்ன முறையும்தான்கவித்துவம் என்கிறோம். பாரதி சொன்னமாதிரி சொல் புதிது, பொருள்புதிது, நயம் புதிது" என்பதுதான் நவ கவிதைக்கு உதாரணம்.