பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா. சொல் புதிது என்பது சிந்திக்க வேண்டும். சொல்லைப் புதுப்பித்துச்சொல்லவேண்டும். Coimages ofWords என்று இதனைக் கூறலாம். பாரதி அக்கினிக் குஞ்சு என்றானே அது மாதிரி. அதே நேரத்திலே இன்றைய கவிஞர்கள் சில சொற்களை உருவாக்கு கிறோம் என்று சொல்லி ரத்த வம்சம் சிவப்பு நிலா, அக்னிப் பூக்கள் என்று அதிகமாக மலினப்படுத்தி விட்டார்கள். இவர்களுக்கு வெறும் சொற்கள்மீதுதான் மோகம் என்று இவர்கள் எழுதுகிற கவிதைகளைப் பார்த்தாலே தெரிந்துவிடும். . - Ꮮl IᎢᎧa IᎢ ; தேவவேளை, ராஜ புஷ்பம், என்பதெல்லாம் கூடச் சேர்த்துக் கொள்ளலாமே. இப்படியான வார்த்தைகள் என்பது ஒரு கவிதையைப் பார்த்தவுடனேயே படிக்க வைத்துவிடுகிறது. "ஆயிரம் நுரைமலர் - ஆற்றங்கரையில் ஆவியின் நாக்கில் மெளனத்தின் குரலில் அநாதைகளே.' இது நா.காமராசனின் கவிதை. இதில் உள்ள விஷயம் என்ன..? ஆயிரம் நுரைமலர்ஆற்றங்கரையில் பாடுகிறான்- இதிலே அழகியல் உணர்வு உள்ளது. இந்தச் சொற்கள் ஒரு ரொமாண்டிக் தொனியை உருவாக்கி வாசகனின் கவனத்தை ஈர்க்கின்றன. "ஆவியின் நாக்கில்... மெளனத்தின் குரலில்..." இந்த