பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு விஷயமும் எளிதில் புரியவில்லை... ஆவியின் நாக்கு என்று பாடுகிறபோது 'செத்துப் போனவர்களின் நாக்கிலே - அதாவது உங்கள் பழைய காலத்து ஆட்களின் நாக்கிலே... அல்லது உங்களை மாதிரி பாதிக்கப்பட்டவர்களின் நாக்கிலே பாடுகிறேன் என்று சொல்கிறாரா என்றும் தெரியவில்லை. 'மெளனத்தின் குரலில்' என்பது 'சொல்ல முடியாமல் சொல்லுகிறேன்' என்கிறாரா?.. சொல்ல முடியாதவர்களின் குரலில் சொல்கிறேன் என்கிறாரா..?.. என்று எதுவுமே தெளிவாகத் தெரியாமல் போய்விடுகிறது. ஆனாலும்Effective-ஆக இருக்கிறது. இதைத்தான் நாம் obscurity என்கிறோம். அதாவது ஒரு விஷயம் பளிச்சென்று விளங்க வில்லை... இருந்தாலும் பவர்ஃபுல்'லாக இருக்கிறது. 'ஆயிரம் நுரைமலர் ஆற்றங்கரையில் ஆவியின் நாக்கில் மெளனத்தின் குரலில் அநாதைகளே. E_{Bił&$$ff பாடகன் பாடுகிறான்... இதில் அநாதைகளே என்று சொல்கிறபோது அந்த வார்த்தையை வைத்து ஆவிகளின் நாக்கில்' என்பதற்கு ஒரு பொருள்கொடுக்க முடிகிறது. மெளனத்தின் குரல் என்பதற்கும் பொருள் தர முடிகிறது. இந்தக் கவிதையின் வெளிப்பாடு நம்மை ஈர்த்து விடுகிறது. நமது மனதிலிருக்கக்கூடிய வார்த்தைகளையெல்லாம் சிதறடித்துவிட்டு கவிஞன் தனது வார்த்தைகளை நமது 55