பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டிருக்கிறாயோ, அவன் உன்னை இந்தக் கணத்திலிருந்து மறந்து விடுவானாக!' என்று சாபமிட்டுப் போய் விடுவதாகக் காளிதாஸன் காட்டுகிறான். ஆனால் உண்மை என்ன? ராஜாவான துஷ்யந்தன் தன் சகல ராஜ குணங்களோடும். வேட்டைக்கு வந்தான். ராஜ குணங்களுக்கேயுரிய விதத்தில் சகுந்தலையைச் சந்தித்துக் கலந்து முடித்துவிட்டு அவளுக்குப் பிள்ளை ஒன்றையும் தந்துவிட்டுப் போய் மறந்து விடுகிறான். ஒரு நிலவுடைமைச் சமூகத்தின் மனோபாவம் அவனிடம் இப்படித்தான் இருந்திருக்கிறது. தாஸன் அவனது பெயரைக் காப்பாற்றுவதற்காக, இதற்காகக் சொன்ன காரணங்களைத் தேடிக் துர்வாசரைப்படைத்தான். இன்றைக்கு இருக்கக்கூடிய கவிஞர் சிற்பி அந்த துஷ்யந்தனைப் போலவே இன்றைக்கும் நம் சமூகத்தில் பலர் இருப்பதைக் காண்கிறார். அந்த சகுந்தலை மோதிரத்தைத் தொலைத்தாள். இன்றைய சகுந்தலை களோ தங்கள் காதலர்களையே தொலைத்து விடுகிறார்கள் என்று புதிதாகப் பாடிவிடுகிறார். பாலா. நீங்கள் சொல்வது புறம் சார்ந்த கருத்து. இதில் அகம் சார்ந்த கருத்தொன்றும் இருக்கிறது. ஒரு பெண்ணுக்குக் கல்யாணமாகி விடுகிறது. கல்யாணத் திற்கப்புறம் அவளுடைய Maiden Name... மாறி விடுகிறது. கிறிஸ் ஈவர்ட் கிறிஸ் லாய்ட் ஆனது மாதிரி. கல்யாணமானப்புறம் அந்தப் பெண்ணின் பழைய பெயர். இதுபற்றிக் கவிதையொன்றை பிலிப்ஸ் ார்க்கின் என்கிற இங்கிலிஷ் கவி எழுதியிருக்கிறான். 58