பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரூஃப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும்" என்று சொல்லிவிட்டார்கள். அதற்கப்புறமும் அவன் எழுதிக் கொண்டிருந்தான். காரணம் அவன் எழுதியவை கவிதை என்ற அவனது நம்பிக்கை. தன்னம்பிக்கை! பாலா. ஒரு கவிதை மாதிரி இன்னொரு கவிதை உருவாகிறதற்கு ஒரு காரணம் நீங்கள் சொல்வது மாதிரி தன்னம்பிக்கை இன்மை. இன்னொன்று முதலில் எழுதினகவிதையின்ரிorm நகலெடுப்பதற்கு வசதியாக இருப்பது. கருத்தை(Matter)க்கடன்வாங்கிவிடலாம். Style-ஐ நகல் எடுப்பதென்பது ரொம்ப சிரமம். எளிதில் அப்படிச் செய்ய முடியும் என்றால் அது மூலத்தின் பலவீனத்தை, குறைபாட்டைத் தான் குறிக்கும். உங்களை மாதிரி பத்துக் கவிஞர்கள் எழுதுகிறார்கள் என்றால் அது அவர்கள் கவிதையை மட்டும் பாதிக்கவில்லை. அதில் ஒரு அடி உங்கள் மேலும் விழுகிறது என்றுதான் அர்த்தம். இப்படி பின்பற்றி" எழுதுகிற அந்தப் பத்து பேர் மீதும் எதிரான விமரிசனம் எழுகிறபோதுஅந்த விமரிசனஉதை'மூலக்கவிஞரான உங்களுக்கும் விழுவதாகத்தான் அர்த்தம். உங்களுக்கு பிறகவிகள் மீது இருந்த கவர்ச்சி மதிப்பு இவற்றில் அவர்களின் சாயல் விழாமல் உங்கள் தனித்தன்மையை எப்படி நீங்கள் காப்பாற்றிக் கொள்கிறீர்கள்? மீரா: எனக்கு முந்தையச் சாதனையாளர்களின் பாதிப்பு என்கவிதைகளில் முற்றாக இல்லாமல் இருக்க இயலாது. பாதிப்பு கொஞ்சம் இருந்திருக்கலாம். கலீல் ஜப்ரானின் முறிந்த சிறகுகள் படித்தபோது இதுமாதிரி 61