பக்கம்:கவிதை ஒரு கலந்துரையாடல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிதல் போன்றவை இல்லாமை இதன் காரணங்களில் அடைபட்டுப் போகிறார்கள். இவர்கள் அனைவருக்குமே மொழியின் அருமை இல்லாததால் தான் கவிதையில் பிரகாசிக்க முடியவில்லை. பாப்புலராக முடியவில்லை. ஆனால் மேத்தா, மீரா, நா.காமராசன் போன்றவர்கள் மொழியையும் மரபையும் அறிந்து மொழியின் அருமையுடைய வர்களாக ஆனதால் புகழ் பெற்றார்கள். இந்தக் கருத்து சரியா? மீரா: கவிதையைப் பொறுத்தவரைக்கும் பிரபலமாக வேண்டுமா? இல்லை... காலகாலத்துக்கும் பெயர் சொல்லக் கூடியதான கவிதையை எழுதவேண்டுமா இந்த இரண்டு கேள்விகள் முன் நிற்கின்றன. நீங்கள் சொன்னது மாதிரி 'மேத்தா, நா.காமராசன் போன்றவர்கள் எழுதுகிற சமகாலப் பிரச்னைகள் பற்றிய கவிதைகள், பிரச்னைகள் தீர்ந்த பிற்பாடு காணாமல் போய்விடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நுட்பமாக, ஆழமாகக் கவிதைகளில் விஷயங்களைச் சொன்னால் தான் அது நிலைத்து நிற்கும். சிணுக்கம் என்ற கவிதையை பிச்சமூர்த்தி செய்திருக்கிறார். அந்தக்கவிதை என்றென்றும் வாழும்' என்றுகூட பலர்நினைக்கிறார்கள். மற்ற கவிஞர்களது கவிதைகள் எல்லாமே வெறும் ஆரவாரம்தான். இந்த பாப்புலாரிடி நிரந்தரமற்றது' என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. அபியின் கவிதைகள் ஒரு தனித்தன்மையுடையதாக இருக்கிறது. இது பலருக்குப் புரியாமல் கூட 69