பக்கம்:கவிதை நூல்கள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

8 யாழ் நூல் அதனால்,

ஆருயிரைப் பொருட்படுத்தா தமரகத்தே தறுகண்ண ராற்றும் வெற்றிப்

போரினையும் புகழ்சான்ற தமிழிளைஞர் காதலராய்ப் புணர்த்து வாழுஞ்

சீரினையும் தெய்வவிழாச் சிறப்பினையும் நாடெங்குஞ் சிறக்கப் பாடிப்

பார்புகழ இசைவளர்க்கும் பாணரெனுந் தமிழ்க்குலத்தார் பரிசு தேறேம்,



காதலையும் வெற்றியையுங் கவின்பெறவே வளர்த்துமனக் கவலை மாற்றித்

தீதொழிய அச்சமுடன் பெருமிதந்தை யளவுபெற நிறுத்திச் சீர்சால்

மாதரொடு மைந்தர்களு நானிலத்தைந் திணைமரபின் மகிழ்ந்து வாழ

ஆதரவா யமைந்திசைந்த யாழொடுபண் பாலைமுத லனைத்துங் காணேம்.


செந்துறைவெண் டுறைதேவ பாணியோடு வண்ணமிவை தெளியத் தேறேம்

சந்தமுள வரிப்பாட லுரிப்பொருளின் றுறைமுறையே தழுவப் பாடிப்

பைந்தொடியார் யாழதனை யிசைத்துமகிழ் தரக்காணேம் பாரோர் போற்றும்

நந்தமிழி னிசையுணர் வசையுரைப்பார் நிலைகண்டு நடுங்கி னேமால்.


சேரரிளங் கோவடிகள் செந்தமிழின் முத்திறமுஞ் செழித்து மல்க

ஆர்வமுறச் செய்தளித்த சிலப்பதிகா ரத்தமைந்த அரிய வுண்மை

தேர,அடி யார்க்குநல்லார் இயற்றியரு ளுரையகத்தே சிறப்பக் காட்டும்

பார்பரவு மிசைநுணுக்கம் முதலான நூல்களிவண் பயிலக் காணேம்


கானல்வரி யுங்காணேங் கற்றறிந்தார் கருத்தை யீர்க்குக்

தேனனைய பரிபாட விசையமுதம் செவியினிக்கக் கேளேந் தெய்வ

ஞானமுணர் பிள்ளை யார் தமிழ்படர்ந்த யாழ்காணேம் நாளும் இன்னே

மானமுடைத் தமிழர்குலம் மதியிழந்த வகைகண்டே மருள்கின் றேமால்.


அவ்வழி,


இன்னபல பலநினைந்தே தமிழருளங் கவல்பொழுதி லிளங்கோ வென்னும்

மன்னவனே தமிழ்வளர்க்க மீட்டுமிவண் வந்தடைந்தான் மகிழ்மி னென்னத்

துன்னியிவண் முத்தமிழுந் துறைபோக வாய்ந்துணர்ந்து தொகுத்து நோக்கி

இன்னிசைதேர் யாழ்நூலை யியற்றினான் அவன்சீர்த்தி இயம்பக் கேண்மின்.


தென்னிலங்கைக் குணபாலிற் காரேறு மூதூரிற் சிறந்து தோன்றும்

தன்னலமில் வேளாளர் குலத்தலைவன் உயர்சாமித் தம்பி யென்பான்

நன்னலஞ்சார் கண்ணம்மை தனை மணந்து மனையறஞ்செய் நலத்தா லென்றும்

மன்னுதமிழ் வளமலிய மயில்வாக னப்பெயர்கொள் மகன்வந் துற்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_நூல்கள்.pdf/4&oldid=1469924" இலிருந்து மீள்விக்கப்பட்டது