பக்கம்:கவிதை நூல்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சிறப்புப்பாயிரம் 1]

மலைசிலையா எடுத்தபிரான் மகிழ்ந்தருளும் திருக்கயிலை யென்னுந் தெய்வ

மலைதலையா லேவணங்கி மகிழ்த்திடுநற் பேறுபெறு மாண்பன் எங்கோன்

மலைவறமெய்ந் நூற்பொருளை மனங்கொள்வோ ரொருமைநிலை வளரத் தெய்வ

மலைமிசையி னிருப்பரென மனங்கொண்டே வளரிமயஞ் சார்ந்தான் மாதோ.

வேறு



துயிலுணர்த் தெழுந்த நாவலந் தீவாந் தூயதோ ரிதழ்வெளி யீட்டிற்

பயிலுநல் லாசா னெனவமர்ந் தொண்மை பரப்புநற் பொருளுரை வழங்கி

அயலவர் மதித்து மகிழ்தரத் தமிழ் நூ லரும்பொருள் பரப்பினான் அன்பின்

இயல்வளர் இமயத் தவநிலை யுறைந்தே யின்றமிழ்ப் பணிபல புரிந்தான்.




ஐயிரண் டாண்ட யிர வொடு பகலும் அருந்தமி ழிசைத்துறை யாய்ந்தே

மெய்மைசேர் தலின் துணிபொருள் பலவும் விளங்கிட ஒருமைசே ருளத்தால்

தெய்வநல் லிமயச் செழுமலை யுறைநாள் திகழ்மலை மகள் திரு வருளால்

ஐயமற் றொழிய முடிபொருள் பலவும் அறிவினிற் றிகழ்த வறிந் தான்.




அங்கமர் நாளில் நம்பியா ரூரர் ஆளுடைப் பிள்ளையா ரிவர்கள்

பொங்குபே ரன்பாற் போற்றிசெய் திசைத்த பொற்புறு திருப்பதி கச்சீர்

தங்குகே தாரத் திருமலை யெதிரே தோன்றிடத் தாழ்ந்தெதிர் போற்றி

அங்கணர் தமிழுக் கருளிய வினிமை யார்ந்துவத் தேக்கின னன்றே.




இன்னிசை வழியே நற்றமிழ் பரப்பும் இயல்புடைச் சம்பந்தர்க் கந்நாள்

முன் னிலைத் தோன்றி ஞானவா ரமுதம் மருந்திய முதல்வியெம் அன்னை

சொன்னிலை வளஞ்சால் சிலப்பதி காரத் தொகுபொரு ளாய்த்திடு காலப்

பன்னிரு பாலைத் திறமுணின் றுணர்த்தப் பாங்குற வுணர்ந்துள மகிழ்ந்தான்.




இரவினில் யாமப் பொழுதிலே யொருநா ளிசைத்தமிழ் வளந்தெரிந் தருளி

உரவனெம் அடிகள் ஒளிபெறு முள்ளத் துவகைமிக் கோங்கிட வெழுந்தே

பரவின னுமையைப் பாடினான் பணிந்தான் பராவருங் காதல்மிக் கிசையின்

மரபினைத் தெரிக்க வகுத்தனன் இசைநூல் வண்டமிழ் வளர்ந்தது நன்றே.




வங்கமார் கடல்சூ ழிலங்கைநாட் டினிலே யமருநாள் மன்னிய அன்பின்

பொங்குநற் புகழான் சிதம்பர வள்ளல் பொற்புறு பண்ணை"யின் மேவித்

தங்கிய பொழுதிற் புத்தர் சீர் பரவு சமனொளி திகழ்தரப் பணிந்தே

அங்கமர் திறத்தால் ஆயிர நரம்பின் ஆதியா ழமைதிகண் டறிந்தான்.




முன்னைநான் மறையின் முற்பட வளர்ந்த முதன்மைசால் தமிழிசை மரபும்

நன்னரார் சங்கந் திகழ்ந்தொளிர் நாளில் நயம்பெற வளர்ந்தாற் றிறமும்

பின்னைநா ளிளங்கோ செய்தருள் சிலம்பிற் பிறங்கிய இசைக்கலை நயமும்

இன்னிசைக் கருவி குழல்வழி கின்ற யாழுறுப் பமைதியா மியல்பும்.


  • Woodstock Eastate, Ceylon.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_நூல்கள்.pdf/7&oldid=1470243" இலிருந்து மீள்விக்கப்பட்டது