பக்கம்:கவிதை நூல்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

12 யாழ் நூல்


இனிமைதேர் யாழிற் றேனென விமிரும் ஏழிசை நரம்பிய லமைவும்

முனிவர்தம் பெருமான் சேரர்தங் குரிசில் மொழிந்த நூற் பாலையின் றிரியும்

கனிவளர் புலமைத் தமிழர்காண் நூற்று மூன்றெனும் பண்ணியல் வகையும்

பனிமதிச் சடையோற் பரவுதே வார யாப்பிய லமைதியாம் பரிசும்,




குடுமியா மலையிற் பல்லவர் கோமான் குறித்திடு மெழுத்தினிற் காணும்

வடுவிலா விசையும் சாரங்க தேவர் வண்டமிழ் நாட்டினிற் போந்த

அடைவினை புணர்ந்தே யியற்றிடு நூலி னமைந்ததே வாரநல் விசையும்

முடிவிலா வின்ப இசைநிலை யுணரக் கிளந்திடு கணித நூன் முறையும்,



ஏழிசை மரபின் உலகவர் கண்ட இயல்புதேர் பிறபொருள் வைப்போ

டேழியல் வகுத்தே யெழின்மிகும் யாழ் நூ லெனுமிஃ தியற் றினான், தமிழர்

வாழநல் வழிகண் டுணர்வினை யருளி வளர்வியு லாநந்த னென்பான்,

ஆழிசூ ழுலகி லறிவொளி பரப்பும் ஆண்மைபெற் றெழுந்தனர் தமிழர்



இயல்வளங் காணேம் இசைவளங் கேளேம் என்று முன், இரங்கிய தமிழர்

துயரொழிந் துவப்பா ராகவித் தோன்றல் துறவற தெறிதலே நின்றே

மயர்வறத் தெளிந்தீ ராயிரம் யாண்டாய் மறைந்தொழி யாழ்த்திறங் கண்டென்

துயர்தவிர்த் துவந்தான் எனத்தமி ழன்னை தொல்லெழில் பெற்றுள முவந்தாள்.



இளிமுத லாக ஏழிசை வளங்கண் டெழில்பெறும் இசைகலம் என்றும்

தெளிதர, மறைந்த பழந்தமிழ் நூல்கள் புதுநலம் பெற்றொளி திகழ,

ஒளிர்தரு பண்டைச் செம்முறைக் கேள்வி: யுருநலம் பெற்றிசை பரப்ப,

அளிதரும் அடிகள் நூல்நலங் கண்டா ரனைவரு மகிழ்ச்சியிற் றிளைத்தார்.




வாழி தமிழர் வளர்புகழால் ஞாலமெலாம்

ஏழிசைதேர் யாழ்நூ லிசைபரப்பி-வாழியரோ

வித்தகனார் எங்கள் விபுலாநந் தப்பெயர்கொள்

அத்தனார் தாளெம் அசண்.




இந்நூற் பாயிரஞ் செய்தான், யாழ்நூ லாசிரியர் மாணவரு ளொருவ னாகிய க, வெள்ளைவாரணன் ,

  • செம்முறைக் கேள்வி : யாழ் நூல் உ0-ஆம் பக்கம் பார்க்க.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_நூல்கள்.pdf/8&oldid=1470270" இலிருந்து மீள்விக்கப்பட்டது