பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கவிதை பயிற்றும் முறை திரட்டப் பெற்றவை யன்று. இன்று தமிழாசிரியர்கள் செய்ய வேண்டிய முக்கிய பணியொன்று உண்டு. ஒவ்வொரு வகுப்பிற் கேற்றவாறு கவிதைகளைத்தொகுத்து வகைப்படுத்தி நல்லமுறை யில் பதிப்பித்து வெளியிடவேண்டும். ஆழ்ந்தும் அகன்றும் கற்றுக் கவிதைகளைச் சுவைத்த தாய்மொழியாசிரியர்களைத் துணை கொண்டு வெளியிடுவோர் தக்க குறிப்புகளுடன் இத்தகைய திரட்டு நூல்களை வெளியிட வேண்டும். அவை தாய்மொழிக் கவிதைகளைப் கற்பிப்பவர்களுக்குப் பெருந்துணையாக இருக் கும். பாடநூல்கட்கு ஏற்ற கவிதைகளை அத்தகைய தொகை நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கலாம். சாதாரணமாகக் கீழ் வகுப்பிற்குரிய இத்திரட்டு நூல்களிலுள்ள கவிதைகளைக் செவிலிப் பாடல்கள், ஆட்டப் பாடல்கள், கதைப் பாடல்கள் என்று பிரிவினை செய்யலாம். இந்த ஒவ்வொரு பிரிவிலும் கிடைக்கும் பாடல்களுக்கேற்றவாறு வேறு சில உட்பிரிவு களையும் அமைக்கலாம். இன்று வெளிவந்திருக்கும் கவிதைத் தொகுப்புகள் இவற்றுக்கு வழிகாட்டிகளாகக் கொள்ளலாம். இங்கனமே தமிழ் இலக்கியக் கருவூலத்திலிருந்து மேல் வகுப்பு கட்குரிய கவிதைகளையும் கல்லூரி வகுப்புகட்குரிய கவிதைகளை பும் தொகுக்கலாம். இவற்றை வாழ்த்துப் பகுதி, அறவுரைப் பகுதி, தொடர்நிலைச் செய்யுட் பகுதி, பல்சுவைப் பகுதி என்று பிரிவுகள் செய்யலாம் ஒவ்வொரு பிரிவின் கீழும் வேறு சில உட் பிரிவுகளையும் அமைக்கலாம். கவிதைகளைப்பற்றிய மிகச் சுருக்கமான குறிப்புகள் மிகமிக இன்றியமையாதவை. மாணாக் கர்கட்குக் கற்பித்து அநுபவம் மிக்க பெரும்புலவர்களைக் கொண்டு இப்பணி மேற் கொள்ளப்பெறல் வேண்டும். பல்கலைக் கழகமும் இப்பணியில் ஈடுபடலாம். பாடத்திட்டங்கள் : இன்று பள்ளியின் பல்வேறு வகுப்புகட் கும் கல்லூரியின் பல்வேறு வகுப்புகட்குமுரிய பாடத்திட்டங்கள் ஆழ்ந்த பயிற்சியும் அநுபவமும் மிக்க ஆசிரியர்களைக் கொண்ட ஒரு குழுவினரால் ஆயத்தம் செய்யப்பெறுகின்றன. இன்று பள்ளி வகுப்புக்குரிய பாடத்திட்டங்களில் கீழ் வகுப்புக்குரிய கவிதைப் பகுதி (1-7 வகுப்புக்குரியது) வாழ்த்து, நீதி, கதை, பல்சுவை என்றும் மேல் வகுப்புகட்குரிய பாடல்கள் (8-10 வகுப்புக்குரியது) சங்ககாலம் (கி.பி. 300 வரை) இடைக்காலம் (301 முதல் 2. பாரதியாரின் கவிதைகள், மலரும் மாலையும், பாரதிதாசன் கவிதைகள் கவிஞன் குரல், முடியரசன் கவிதைகள் போன்றவை .