பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5



இப்பெரும் புலவர் பாலை பாடிய பெருங் கடுங்கோ என்பதற்கு மிக மிகப் பொருத்தமுடையவர் என்பது, இவரால் பாடப்பட்ட கலித்தொகைச் செய்யுட்களில் பாலை நிலத்தின் கொடுமையினைத் தெரிவித்திருப்பதிலிருந்து நன்கு உணரலாம். பாலையில் நீர் இன்றி மக்கள் துன்புற்றுக் கண்ணீர் சிந்தினர் என்றும், அங்ஙணம் சிந்திய கண்ணிரையே தம் நெஞ்சினை நனைத்துக்கொள்ள உண்ணீராகக் கொண்டனர் என்றும் தம்மகத்துக் கொண்ட கருத்தினை,

"உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குதி
தண்ணீர் பெருஅத் தடுமாற்று அருந்துயரம் கண்ணிர் நனைக்கும் கடுமைய காடு"

என்ற அடிகளில் அமைத்துப் பாலையின் கடுமையினைக் குறிப்பிடுவாராயின், இதனிணும் கடுமையாகப் பாலையின் கொடுமையினைக் கூற இயலுமோ ? சிந்தித்துப் பாருங்கள்.

இன்னோரன்ன கருத்துக்கள் பல இப்புலவர் வர்க்கில் நிறைந்திருப்பதல்லை, அவற்றை அவர் கவிகளில் கண்டு மேலும் இன்புறுவீர்களாக.