பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

2. சேரமான் கணைக்கால் இரும்பொறை

மக்கட்கு அமைய வேண்டிய பண்புகளில் மானமும் ஒன்று, மானமாவது எக்காலத்தும் நிலையில் தாழாமையும், அங்கனம் வரவேண்டிய தாழ்வு ஊழ் காரணமாக வந்த போது, உயிர் வாழாமையும் ஆகும். இதனை வள்ளுவர் ' மானம் ' என்ற அதிகாரத்தில் அமைத்து மானத்தைக் கைவிடாதே என்ற கருத்தினை அழுத்தந் திருத்தமாகப் பேசியுள்ளார். அவர், “ தம் குடிப் பிறப்புத் தாழ வரும் செயல்களை ஒழிக்கவேண்டும். யார் தமது மானத்தினின்று விலகி வாழ்வு நடத்துகின்றனரோ, அவர்கள் தலையினின்று. கீழே மழித்து நீக்கப்பட்ட மயிருக்குச் சமானமானவர். குன்று போன்ற தோற்றமுடையவராயினும், குன்றி மணி போன்ற மானம் சிதைக்கும் செயல் புரிந்தால் அவர் குன்றிப் போவர். மானம் குறைந்த வர்க்குப் புகழ் ஏற்படாது. நல்ல மானியாக இருப்பவர் மானம் கெடும் நிலை ஏற்பட்டால், தன் ஒரு மயிர் இழக்க நேரும்போது உயிர் விடும் கவரிமான் போல் மானத்தைக் காக்க உயிரையே இழப்பர்” என்றெல்லாம் கூறிப் போந்தார்.

"உயிரை விட்டேனும் மானத்தைக் காப்பது தான் சிறப்பு ” என்று வில்லியார் கூறுவர். "மானம் இழந்து உலகில் வாழும்