பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


தகைய நண்பரோடும் நட்புக் கொண்டிருக்க விரும்பாதவர் என்பதையும், முயற்சியுடைய நண்பரோடு உறவாடவே உறுதி கொண்டிருந்தார் என்பதையும் அறியலாம். இக் கருத்துக்களை " உளம் முயற்சி இலாளரோடு இயைந்த கேண்மை (நட்பு) இல்லாகியரோ என்ற அடியினாலும், " உள்ளத்து உரன் (வன்மை) உடையாளர் கேண்மையொடு இயைந்தவைகல் (நாட்கள்) உளவாகியரோ என்ற அடியினாம் நன்கு உணரலாம். மேலும் இவரது பாடலால் எலி நெற்கதிர்களைக் கொண்டு தன் வளையில் சேமித்து வைத்து உண்ணும் செயல் அழகுபடக் கூறியிருப்பதையும் அறியலாம். மற்றும் ஒரு செய்தியும் இவரது புறநானூற்றுச் செய்யுள் புகலுகிறது. அது புலியின் மேம்பாட்டுச் செய்தியாகும். புலியானது தன்னுல் கொல்லப்பட்ட பன்றி, தனது இடப் பக்கத்தே வீழுமானால், அது தனது வீரத்திற்கு இழுக்கினை உணர்த்தும் செயல் என்று தான் எத்துனைப் பசித்து இருந்தாலும், தான் கொன்றதேனும் அவ்வராகத்தை உண்ணுதாம். அன்று தனக்கு யாதோர் உணவும் கிடைக்காதிருப்பினும், பசித்தே இருந்து

அடுத்த நாள் ஆண் யானை ஒன்றைக் கருதி வெளியே சென்று, தன் எதிரே பட்ட அக் களிற்றினைக்கொன்றுத் தனக்கு வலத்தே விழுமாறு செய்து அதன்பின் அவ் வேழத்தின் தசையினைத் தின்னுமாம்.