பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

5. சோழன் நலங்கிள்ளி

கிள்ளி என்னும் மொழி சோழர் குடிக்கே சிறப்புப் பெயராகத் திகழவல்லது. அச் சொல்லையே தமக்குரிய பெயராக இவ்வேந்தர் பெற்றிருப்பாராயின், சோழருள் இவரும் ஒரு சிறப்புப் பெற்றவர் என்பதும் அறிய வருகிறது. மேலும், இவர் சோழர்குடிச் சீரியர் ஆதலின், பெயருக்கு முன் அக்குடிக்குரிய பொதுச் சொல்லையும் சேர்த்துச் சோழர் நலங்கிள்ளி என்று கூறப்பட்டு வந்தார். குடிப் பண்புடன் நலப் பண்பும் கூடி இருந்தமையின் சோழன் நலங் கிள்ளி என்றும் அழைக்கப் பட்டு வந்தனர்.

இம் மன்னர் சோழன் நலங் கிள்ளி என்ற பெயரால் மட்டும் குறிப்பிடப் பெறாமல், சேட் சென்னி, புட்பகை, சேர் வண் கிள்ளி, என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளார். இங்ஙனம் தனித் தனிப் பெயரால் சுட்டப் பெறாமல் சேட் சென்னி நலங் கிள்ளி என்றும் குறிப்பிடப்பட்டு வந்துள்ளார்.

இவர் புலவர்களால் சிறப்பித்துப் பாடப் பட்ட புகழ்பெற்றவர். இவரை, உறையூர் முது கண்ணன் சாத்தனார், கோவூர் கிழார், ஆலத்தூர் கிழார், ஆகிய முப்பெரும் புலவர்கள் பாடிச் சிறப்பித்துள்ளார். இம் மூவரது பாடல்களால் சோழன் நலங்கிள்ளி