பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

யின் வாழ்க்கைக் குறிப்புக்கள் பல தெரிய வருகின்றன. சோழன் நலங்கிள்ளி போர் செய்து வெற்றி கொள்ளுதலையே பொருளாகக் கொண்ட மனப் பண்புடையவர் என்றாலும், உறையூர் முதுக் கண்ணனார் இவரது வீரத்தின் வேகத்தைக்கண்டு, “இப்படி இம்மைக்குரிய இன்பத்திற்கு ஆவன செய் யின், அம்மைக்குரிய ஆன்ம லாபத்திற்கு ஆவனவற்றை எப்போது இவர் செய்வது?" என்பதை அறிந்து, “அறம் பல செய்க” என்னும் நல்லுரையினைக்கூற, அதன்படியே இவர் நடந்து கொண்டவர். இதனால் இவர் புலவர் வாய் மொழிப்படி நடப்பவர் என்பது தெரிகிறதல்லவா?

இவரது போர்ச்சிறப்பு மிகுதியாகக் கோவூர் கிழாரால் பாராட்டப்பட்டுப் பாடப்பட்டுள்ளது!. இவரது வெண் கொற்றக்குடை சேரர் பாண்டியர் குடைகள் பின்னிட முன்னின்ற சிறப்புடையது. இங்ஙனம் முன் நின்ற சிறப்பானது பொருளும் இன்பமும் முன்னுள்ள அறத்தின் பின்னே தோன்றும் காட்சி போன்றது எனப் புலவர் உவமையாலும் விளக்கினர். இவர் நாட்டின்கண் இருப்பதினும், புகழையும் போர் வென்றி யையும் விரும்பிப் பாடி வீட்டிலேயே வீற்றிருக்க விரும்புவர். இவரது மனப்பண்புக்கு ஏற்ப, இவரது யானைகளும், பகைவரது