பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

வேண்டுமோ? “பிறன் கடை மறப்ப நல்குவன் செலினே” என்பர் கோவூர் கிழார். தாம் வென்ற நாட்டையும் கூடப் பிறர்க்கு ஈவராம். “பரிசில் மாக்களே ! சோழன் நலங் கிள்ளியைப் பாடுவோம் வருக. அவன் பூவா வஞ்சியையும் (கருவூரையும்) விறலியர் சூடும் பூவிற்கு விலையாக மாட மதுரையையும் தருகிறவன்” என்று இவரது கொடைத்திறத் தைப் புகழ்ந்துள்ளார் கோவூர்கிழார். அவரே இவரைநோக்கி, “வலிமையும் முயற்சியும் உடைய வேந்தே! பிறரிடம் சென்று பாடிப் பெறுதல் வேண்டா ” என்று கூறுவதனால் இவருக்குப் பிறரிடம் செல்லா வகையில் பொருள் ஈவார் இம்மன்னர் என்பது புலப்படுகிறது. சோழன் நலங்கிள்ளி தம் பகையினைப் போக்கிக் கொள்ளுதலோடு பிறர் பசியைப் போக்கவே முன் வருவர் என்பதைக் கோவூர்கிழார் “தன் பகைகடிதல் அன்றியும் சேர்ந்தோர் பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ” என்று கூறியதிலிருந்து தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழும் பெற்றியும் புலனாகிறது. என்றாலும், “படுகளத்தில் ஒப்பாரி ஏது?” என்பதனால் தம் தாயத்தாரோடு பகைத்து அவர்களது ஆவூரையும் உறையூரையும் முற்றுகை செய்தவர். இதற்குச் சான்று இவர் நெடுங்கிள்ளியுடன் பகைமை கொண்டதால் அறிந்து கொள்ளலாம்.

இன்னோரன்ன பீடும் பேரும் உடைய மன்-