பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

6. இரும்பிடர்த் தலையார்


சோழர் குடியின் தோன்றல்களில் ஒருவன் கரிகாற்சோழன். இவன் கரிகால் பெருவளத்தான், சோழன் கரிகால் பெருவளத்தான் என்றும் கூறப்படுபவன். இவன் சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் புதல்வன். நாங்கூர் வேள் மகளை மணந்தவன். இவனுக்குக் கரிகாலன் என்னும் பெயர் வந்தமைக்கு இரு பெருங் காரணங்கள் கூறப்படும். ஒன்று இவன் இளமையில் நெருப்பினால் சுடப்பட்டு உயிர் பிழைத்த போது, இவனது கால் சிறிது கரிந்த காரணத்தால் கரிகாலன் எனப்பட்டான் என்றும், கழுமலம் என்னும் ஊரில் இருந்து யானையை ஏவ, அது சென்று இவனுக்கு மாலை சூட்டிக் கொணர்ந்து அரசராக்கியதால் கரிகாவலன் என்பது கரிகாலன் என ஆயிற்று என்றும் கூறப்படும்.

இவன் சிறந்த போர்வீரன். சேரமான் பெருஞ் சேரலாதனோடு வெண்ணி யென்னும் ஊர்ப்புறத்தே போர்க்களத்தில் போரிட்டு வென்றவன். அதே களத்தில் பாண்டியன் ஒருவனையும் வெற்றி கொண்டவன். இமயம் வரை படை எடுத்துச் சென்று அம்மலைக்கும் தன் ஊருக்கும் இடைப்பட்ட இடங்களில் இருந்த வடநாட்டு மன்னர்களையும் வென்று வாகை சூடியவன். காவிரிப்பூம்பட்டினத்தைத்