பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

வர்” என்று அறிந்து அவரிடம் தம் வழக்கைக் கூறினர். நரை முடித்த தோற்றத்தோடு விளங்கிய கரிகாலன் இருவர் வழக்கையும் நன்கு ஆராய்ந்து குற்றம் உள்ளவர் இவர் தாம் என்பதை இருவருள் ஒருவரைச் சுட்டிக் காட்டினான். தீர்ப்பு ஒழுங்கானது என்பதை வந்த இரு பெரு முதுவர்களும் ஒப்புக் கொண்டனர். அதன் பின் கரிகாலன் தன் முதுமைக் கோலமாகிய வேடத்தை நீக்கி இளைய கரிகாலனாகத் தோற்றம் அளித்தனன். “ஆ! இவன் நம் வழக்கைத் தீர்க்க வலியற்றவன் என்றல்லவா எண்ணினோம்! இப்போது அவனே அன்றோ நல்ல அனுபவம் முதிர்ந்தவன் போல் வழக்கைத் தீர்த்தனன்!” என்று கூறிப் பாராட்டிச் சென்றனர்.

இத்தகைய பேரும் புகழும் சீரும் சிறப்பும் உடைய மன்னனது அம்மானே இரும்பிடர்த்தலையார் ஆவார். கரிகால் பெருவளத்தானது அம்மான் முறையினர் இப்புலவர் என்றால், அவர் அரசமரபினர் என்பது உறுதியல்லவா? இவர் இச்சோழ மன்னனுக்கும் பெருந்துணையாய் இருந்தனர். இவன் சுடப்பட்டபோது, அச் சுடுதலினின்று பிழைக்குமாறு செய்தவர் இவரே ஆவர். இவர் பெற்றோரால் எப்பெயரால் அழைக்கப்பட்டனர் என்பது தெரியவில்லை. ஆனால், இவர் யானையின் பிடரை இரும்பிடர்த்தலை என்று சிறப்பித்த காரணத்தால் இரும்பிடர்த்தலையார் என்று

2637–3