பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

னோடு சண்டை செய்து தோற்பின் உன் அரசையும் செல்வத்தையும் வேறு எவர்க் கேனும் கொடுத்து விடுவாயோ? அவற்றை இவர்களுக்கே அன்றோ கொடுப்பாய்? நீ தோற்றால் உன் பகைவர் உன்னை எள்ளி நகைப்பர் அல்லவா? உனக்குப் பழியும் உண்டாகும் அல்லவா? ஆகவே, நீ கொண் டுள்ள கோபந் தணிக” என்று கூறி இம் மன்னர் கோபம் தணியுமாறு செய்தார். இதனால், இவருக்கும் இவர் பிள்ளைகட்கும் பகைமை இருந்ததை அறிகிறோம் அல்லவா? புலவர் மொழிகள் அரசர் கோபத்தைத் தணித்தன.

இவ்வரசப் பெருமகனார் பின்பு எல்லாவற்றையும் துறந்து வடக்கிருந்து உயிர் துறக்கத் தீர்மானித்தார். இவர் வடக்கிருந்தபோது இவர் தம் உடல் தசையை வாட்டி வடக்கிருத் தலைக் கண்டு “முழூஉம் வள்ளுரம் (தசை) உணக்கும் மள்ள” என்று கனிந்து கூறினர் கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதனார். வடக்கிருத்தலாவது மேலுலகத்தை அடைய விரும்பினோர் இவ்வுலகில் அனுபவிக்கும் இன்பத்தைத் துறந்து, விரதத்தாலும் உடலை மெலியச் செய்து யோகப் பயிற்சியால் உயிரை விடுத்தற்குத் தாம் வாழ்ந்த இடத்தைவிட்டு நீங்கி வடதிசை ஆற்றிடைக் குறையில் மழை நாள், வெயில் நாள், பனி நாள் என்றும் பாராமல் தங்குதலாம். மீளாமல் நியமத்-