பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

துடன் வடதிசையில் செல்லுதலும் உண்டு. இங்ஙனம் செல்லுதலை உத்தர கமனம் என்றும் மகாப் பிரத்தானம் என்றும் கூறுவர்.

கோப்பெருஞ் சோழர் துறக்கம் புக வடக்கிருந்தார். அதுபோது இவரது உயிரனைய நண்பர் பிசிராந்தையார் அங்கு வந்தனர். அது கண்ட பொத்தியார், சோழர் எல்லாவற்றையும் துறந்து வடக்கிருக்கச் சென்ற துணிவினையும், இவர் வடக்கிருத்தலை அறிந்து நட்பே பற்றுக் கோடாகப் பிசிராந்தையார் அங்கு வந்ததையும், பிசிராந்தையார் எப்படியும் இங்கு வருவர் என்று உறுதியோடு சோழர் கூறிய கூற்றையும் வியந்து பாராட்டினர். “இத்தகைய அரசரை இழந்த நாடு இரங்கத்தக்கது.” என்றும் கூறினர்.

பொத்தியார் கோப்பெருஞ் சோழரை விட்டுப் பிரிந்திருக்கும் நிலையினைக் குறித்து ஓர் உவமை வாயிலாகக் கூறியிருப்பது நயமாக உள்ளது. அவர் உணவு தந்து காத்து வந்த யானையை இழந்த பாகன் உற்ற துன்பத்தை உவமை காட்டினர்.

கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்தே உயிர் துறந்தார். அங்கு நடுகல் நடப்பட்டது. அந்நடுகல்லைக் கண்ட பொத்தியார் இச் சோழர் பண்பாடுகளை எண்ணி எண்ணி, “எம்மரசர் பாடுநர்க்குக் கொடுத்த பல புகழ் உடையவர் ; கூத்தர்க்குக் கொடுத்த அன்-