பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

புடையவர் ; நீதி வழுவாச் செங்கோலர்; திண்ணிய நட்புப் பண்பு உடையவர் ; அந்தணர்க்குப் புகலிடமாய் இருப்பவர் என்று கனிந்து கூறினர்.

பொத்தியாருக்குக் கோப்பெருஞ் சோழரை விட்டுப் பிரிந்து வாழ மனம் இல்லை. ஆகவே, தாமும் வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தார். அதுபோது அவரது இல்லக் கிழத்தியார் கருவுற்றிருந்தார். அஃது அரசர்க்குத் தெரியும். ஆதலின், குழந்தை பிறந்த பின் தம்மைத் தொடர்ந்து வருமாறு கூறி இருந்தார். அவ்வாறே தம் நண்பர் மொழியினை மாறாது பிள்ளை பிறக்கும்வரை இல்லத்தில் இருந்தார். பிள்ளையும் பிறந்தது. பின்பு கோப் பெருஞ்சோழர் நடுகல் கண்டு, “நீ கூறியபடி பிள்ளை பெறும் அளவு இருந்தேன். இனியும் நின்னைப் பிரிந்து ஆற்றியிரேன். எனக்கும் நின் நடு கல்லில் இடந்தருக.” என்று கேட்டனர். நடு கல்லும் இடம் தந்தது. அதுபோது பொத்தியார், “பழமையான நட்புடையவர்கள், கல்லானாலும் இடம் கொடுப்பர்” என்று வியந்து கூறினார். என்னே இவர்கள் நட்பின் மாண்பு !

இங்ஙனம் புலவர்களால் பாராட்டப்பட்ட பெருமன்னராம் கோப்பெருஞ் சோழர் பாடிய பாடல்கள் ஏழு. அவை குறுந்தொகையில் நான்கு, புறநானூற்றில் மூன்றும் ஆகும். குறுந்தொகைச் செய்யுட்கள் காதலர்களின்