பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

உளப் பண்புகளை உணர்த்துவன, அவற்றைப் பின்னால் நீங்களே படித்து இன்புறுக.

இனிப் புறநானூற்றில் காணப்படும் செய்யுட்களின் பண்பைச் சிறிது காண்போமாக.

முன்பே கோப்பெருஞ் சோழர்க்கும் புலவர்கள் பிசிராந்தையார், பொத்தியார் ஆகிய இவ்விருவர்க்கும் உளம் ஒத்த நட்பு இருந்தது என்பதைக் கண்டோம். அதனைப் புலவர் வாயிலாக உணர்ந்த நாம் கோப்பெருஞ் சோழர் வாயிலாகவும் அறியவேண்டும் அல்லவா? கோப்பெருஞ் சோழர் வடக்கிருந்தார். அப்போது சோழர் தம்மோடு இருந்த வர்களை நோக்கி, “எம் உயிரினைப் பாதுகாப் பவர் பாண்டிய நாட்டுப் பிசிர் என்னும் ஊரில் வாழ்பவராகிய ஆந்தையார் என்பவர். அவர் யான் வடக்கிருத்தலை அறிந்து ஈண்டு எப்படியும் வந்தே தீருவர். அவர் செல்வம் உள்ள காலத்தில் வருதற்குத் தடைப் பட்டாலும், துன்புற்ற காலத்தில் வருதற்குச் சிறிதும் தடைப்படார்.” என்று கூறியருளினர். இதனை

“செல்வக் காலை நிற்பினும்

அல்லல் காலை நில்லலன் மன்னே”

என்ற இம்மன்னரது வாக்கால் அறியலாம்.

மேலும், கோப்பெருஞ்சோழர் தம் நண்பரைப்பற்றிக் குறிப்பிடும்போது “என் நண்பர் வருவரோ? வாராரோ?” என்று ஐயம் கொள்ளாதீர். அவர் என்னிடம் என்றும் இகழ்ச்சி-