பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

8. சோழன் குளமுற்றத்துத்
துஞ்சிய கிள்ளிவளவன்

“வளவனாயினும் அளவு அறிந்து உண்” என்பது தமிழ் நாட்டுப் பழமொழிகளுள் ஒன்று. இதன் பொருள் பெருஞ் செல்வத்தைப் பெற்ற சோழனானாலும் வீணிலே ஒன்றையும் பாழாக்காமல், உண்ணுதல் வேண்டும் என்பதாம். இதனால் சோழர்கள் பொருள் வளம் படைத்தவர்கள் என்பதும் தெரிகிறது அல்லவா? அத்தகைய சோழர் குடிப் பொதுச் சொல்லாகிய வளவன் என்பதைத் தம் சிறப்புப் பெயருடன் இணைத்துப் பேசப்படும் பெருமை சான்றவர் கிள்ளிவளவன் என்பவர். இவர் அரசராக இருந்ததோடு அல்லாமல், அருங் கவிகளைப் புனையும் அறிஞராகவும் இருந்திருக்கிறார்.

இம் மன்னர் பிரான் உறையூரைத் தமது தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டவர். இவர் கொடையும் வீரமும் உடையவர். இவர் கருவூரை முற்றுகை இட்டுச் சேரனை வென்றவர். இவரது வரலாற்றுக் குறிப்புக்கள் இவரைப் புகழ்ந்து ஆலத்தூர் கிழார், மாறோக் கத்து நப்பசலையார், ஆவூர் மூலங்கிழார், இடைக்காடனார், ஆடுதுறை மாசாத்தனார், ஐயூர் முடவனார், கோவூர் கிழார், நல் இறையனார், எருக்காட்டுத்தாயம் கண்ணனார், வெள்-