பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

ளைக்குடி நாகனார் ஆகிய புலவர் பெரு மக்கள் பாடிய பாடல்களில் இருந்தும் அறியலாம். இங்ஙனம் அறியப்பட்ட குறிப்புக்கள் யாவை என இனிக் காண்போமாக.

ஆலத்தூர்க்கிழார் இக் கிள்ளிவளவனைப் பற்றி அறிந்து கூறியவை பின்வருவன : அவையே, “இம் மன்னர் பாணர்க்கு நீங்காத செல்வம் ஈந்தவர். பெருமை பொருந்திய வன்மையான தாள் உடையவர். (அரசர்கட்குக் காவல் மரம் மிக்க உரிமையுடையது ; பெருமை தருவது.) அதனை வெட்டி வீழ்த்த முன்வருபவர். அது வெட்டப்படும்போது, அதனைக் கண்டு அம்மரத்திற்கு உரிய மன்னன் வாளா இராமல் அதனை வெட்டும் பகைவனோடு வீறிட்டு எழுந்து போரிடத் தொடங்குகையில் தாமும் போரில் எழுச்சி கொண்டு அதில் வெற்றிகொள்ளும் பொருட்டு வேலைத் தாங்கி அப்பகைவர் உள்ள இடத்திற்குப் போதல் உரியவர், தம் வாயிலில் எவரேனும் இரவலர் வருவராயின், அவர்கள் நீட்டித்து இவரது வாயிலில் நின்று காலம் பார்த்துக் கேட்பன கேட்கவேண்டும் என்பது இன்றி, உடனே அவர்கட்குப் பொற்றாமரைப் பூவைச் சூட்டி அனுப்புவார். பரிசிலர்க்குத் தேரும் வழங்கும் இயல்பினர்” என்பன.

மாறோக்கத்து நப்பசலையார் கிள்ளிவளவனைப்பற்றிக் கூறுகையில், இவ்வரசருக்குப் போரின்கண் உள்ள விருப்பினால் பகைவரது