பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

அரணைத் தகர்க்க வலிய ஆற்றலுடையவர் என்று கூறுகிறார். இவரால் அழிக்கப்படும் அரண்கள் முதலைகள் உலாவுவதும் குழிந்த இடத்தையுடைய அகழியையும் செம்பு போன்று திண்மை மிக்க மதிலையும் உடையவை. இவ்வரண்களை யுடையனவாயினும் அவை நல்லன என்று கூடப் பாராமல் அழிக்கும் ஆற்றல் உடையவர். இம் மன்னரது ஈகைப் பண்பு இயற்கையில் அமைந்த பண்பு. அதற்குக் காரணம் இவரது முன்னோர் புறவுக்காகத் தம் தசையினையும் ஈந்தவர் என்பதை இப்புலவர் இம்மன்னரைக் குறிப்பிடுகையில் பெரும்பாலும் குறிப்பிட்டே செல்கின்றனர். அங்ஙனம் கொடுக்கும் மரபில் இவர் தோன்றியுள்ளமையால் இவர் கொடைக்குணம் இயற்கையாதலின், அஃது இவர்க்குப் புகழ் ஆகாது என்றும், இவரது முன்னோர் ஆகாயத்தில் இருந்த தூங்கெயில் என்னும் கோட்டையினை அழித்த கொற்ற முடையவர் ஆதலின், இவர் பகைவர்களை வெல்லுதலும் இவர்பால் அமைந்த இயற்கை வன்மையினைக் காட்டுமே அன்றிப் புகழாகாது என்றும், உறந்தையம் பதியில் அறமும், நீதியும் எப்போதும் நிலை பெற்று இருத்தலின், இவரது அரசமுறைமை புகழ் உடையது என்று கூறுதற்கும் இல்லை என்றும், இம்மன்னர் சேரனது கருவூரை முற்றுகை இட்டபோது வஞ்சப் புகழ்ச்சியாக இம்மன்னரது ஈகைவன்மை, செங்கோன்மை