பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

முதலியவற்றை வலக்காரம் தோன்றப் பாடியுள்ளார்.

ஆவூர் மூலங்கிழார் இவரைப்பற்றி யாது கூறியுள்ளார் என்பதையும் காண்போமாக :

கிள்ளிவளவன் நல்ல படை பலம் உடையவர். இவர் கோபங்கொண்டு பார்க்கும் இடங்கள் தீ பரவும் இடங்களாக ஆகிவிடும். அதாவது வெற்றி கொள்ளும் பொருட்டுச் சுட்டு எரிக்கப்பட்டுப் போகும் என்பதாம். இவரே நயந்து நோக்கும் இடங்கள் யாவும் பொன்னும் பொருளும் பொலியும் இடங்களாகும். அதாவது இவரது அருட்பார்வை பெற்றவர் நல்ல பரிசிலைப்பெறுவர் என்பதாம். மேலும் இவர் தமது ஆற்றல் காரணமாகச் சூரியனிடத்தில் தண்மையைப் பெற விரும்பினாலும், சந்திரனிடத்தில் வெம்மையைப் பெற விரும்பினாலும் வேண்டியது விளைவிக்கும் ஆற்றல் உடையவர். பரிசில் மாக்கள் தேவ நாட்டை அடைந்து அங்குவாழவும் எண்ணம் கொள்ளா ராம். இதற்குக் காரணம் அங்குச் செல்வம் உடையவர் ஈதலும், அஃது இல்லாதார் ஏற்றலும் இன்றி ஒரே நிலை இருத்தலே என்க. இதனைப் புலவர், “உடையோர் ஈதலும் இல்லார் இரத்தலும் கடவது அன்மையின் கையறவுடைத்து” என்பர். இம் மன்னரது நாட்டில் உடையவர் ஏற்பவருக்கு தலைச் செய்யும் பண்பு நிலைத்து இருப்பதால், இவரது நாட்டின்கண் வாழவே இரவலர்