பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

உளங் கொள்வர். இதனால் மன்னரது கொடைப் பண்பும், மக்களது ஈகைப் பண்பும் அறியவருகின்றன அல்லவா? “மன்னன் எவ்வழி அவ்வழி குடிகள்” என்பது நம் நாட்டுப் பழமொழிதானே? இவரது வீரத்தின் மேம்பாட்டை ஆவூர் மூலங்கிழார் வெகு சமத்காரமாகக் குறிப்பிட்டுள்ளார். அதாவது “பகைவரது மகுடங்களாகச் செய்யப்பட்ட பொன்னை இவர் தமது பாதங்கட்கு வீரக்கழ லாகச் செய்து புனைந்துகொள்வார். இவரை யார் இழித்து உரைக்கின்றனரோ, அவர்கள் கழுத்து இறைஞ்சுமாறு செய்ய வல்லவர். புகழ்ந்துரைப்போர் பொலிவுற விளங்கச் செய்வார்.”

கோவூர் கிழார் இக் கோமகனாரைப் பற்றிக் கூறியிருப்பனவற்றை இனிக் காண்போமாக :

கிள்ளி வளவன் போரில் கொடுமை மிக்கவரே. இயமனாகிலும் உயிர்களைக் கொள்ள விரும்பினால், அவ்வுயிரின் கால அளவு உலந்த போது கொண்டு செல்வன். ஆனால், கிள்ளி வளவனோ எனில், காலமே பாராது பகைவரை வேண்டியபோது கொல்லும் தொழிலர். “வேண்டிடத்து அடூஉம் வெல் போர் வேந்தே” என்று இக்காரணம் பற்றியே கூறப்பட்டது. மேலே கூறிய கொடுமையை மேலும் விளக்க வேண்டினால், கிள்ளி வளவனது நிகழ்ச்சி ஒன்றால் கோவூர் கிழார்