பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை

சங்கம் மருவிய நூற்கள் ஒரு தமிழ்ச் சுரங்கம். அச் சுரங்கம் தன் அகத்தே பல பொருள்களைக் கொண்டு திகழ வல்லது எடுக்க எடுக்கச் சுரந்த வண்ணம் இருக்க வல்லது. அச் சுரங்கத்தினின்றும் பல பொருள்களை எடுக்கும் யான், இதுபோது அரசர் குடியினராய் இருந்தவர்களும் அருங்கவிகளாக இருந்திருக்கின்றனர் என்பதை மாணவ உலகம் அறிந்து கொள்ளும் பொருட்டுக் கவி பாடிய காவலர் என்ற பெயரால் இந் நூலினை உரை நடையில் எழுதியுள்ளேன். சேர சோழ பாண்டின் என்ற முறைப் படுத்திக் கூறப்பட்டு வருதல் மரபாய் இருத்தலின், அவ்வரச மரபுப்படி முறைப்படுத்திக் கவி பாடிய காவலர்களை அமைத்துள்ளேன். இளந்திரையர் முடியுடை மூவேந்தர் குடியுடன் வைத்து எண்ணுதற்கு இன்றிக் குறுநில மன்னராகவே குறிக்கப்படுதலின், இறுதிக்கண் அவரை நிறுத்தியுள்ளேன்.

“அம்மை அப்பர் அகம்”
77, அவதானம் பாப்பையர் வீதீ
சூளை, சென்னை.
6-9-1954

பா.து.கா.