பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

தாம். இவரது நாடு இரு மருந்தினை விளைக்கும் நாடு என்கிறார் புலவர். இரு மருந்தாவன, சோறும் நீரும். ஆ என்னே ! இம் மன்னர் புலவர்க்கு அளிக்கும் வண்மையின் மாண்பு! புலவர்கள் வெய்து உண்டதனால் அடையும் வியர்வையே அன்றி வேலை செய்வதனால் அடையும் வியர்வை கொள்ளாது இருக்க, இவர் பொருள்களைக் கொடுத்து உதவுவாராம். இதனை

“வெய்து உண்ட வியர்வு அல்லது

செய்தொழிலால் வியர்ப்பு அறியாமை ஈத்தோன்”

என்ற அடிகளில் காண்க.

இம் மன்னரது ஆதரவில் வாழும் புலவர்கட்கு எதைப்பற்றியும் கவலை இராது, இதற்குக் காரணம் புலவரது கருத்து அறிந்து வேண்டியது உணர்ந்து ஈய வல்லர் என்பதே. இப்புலவர் இதனை எத்துணைக் குதூகலத்துடன் பாடிக் காட்டுகிறார் பாருங்கள் !

“குணதிசை நின்று குடமுதல் செலினும்
குடதிசை நின்று குணமுதல் செலினும்
வடதிசை நின்று தென்வயின் செலினும்
தென்திசை நின்று குறுகாது நீடினும்
யாண்டு நிற்க வெள்ளி, யாம்

வேண்டியது உணர்ந்தோன்”

என்பன புலவர் வாக்கில் எழுந்த மொழிகள்.

நல்லிறையனார் மிகுந்த வறுமையால்