பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


வாடிய புலவர். இவர் உண்ணாது பல நாள் வாழ்வு நடத்தியவர் என்பது, இவர் கிள்ளிவள வரைக் குறிப்பிடும்போது தம் போன்ற வறுமையுடைய மக்கள் உண்ணுதற்கு உணவு பெருமையால் கையைக் கழுவுதற்கும் காலம் வாய்க்காமல், அக்கை ஈரமே அறியாத நிலை யில் இருந்தது என்பதை அழகுபட ஈரங்கை மறந்த என் இரும்பேர் ஒக்கல் என்ற அடியினில் சித்திரித்துள்ளார். இதனால், கிள்ளி வளவர் வறுமையாளர் துன்பம் தீரப் பொருள் ஈபவர் என்பது தெரியவருகிறது.

கிள்ளிவளவரது சார்பில் இருந்த புலவர் கள் சிறிதும் வாட்டம் இன்றி வாழ்ந்தனர். என்பது எருக்காட்டுர்த் தாயங்கண்ணனுர் பாடலாலும் தெரிகிறது. அவர் குதுகலத்துடன், ' நாங்கள் கடலானது ஊழிக் காலத்தில் பொங்குவது போன்று பொங்கினும், சூரியன் கிழக்கே தோன்ருது தெற்கே தோன்றினாலும் அஞ்சமாட்டோம். நாங்கள் கிள்ளி வளவன் தாள் நிழலில் இருப்பவர் ' என்பனவற்றை

"எரிதிரைப் பொருங்கடல் இறுதிக்கண் செலினும்
தெறுகதிர்க் கனலி தென்திசைத் தோன்றினும்
என் என்று அஞ்சலம் யாமே "

என்று குறிப்பிட்டுள்ளார். இவர் குறிப்பிடும் அளவுக்கு இம் மன்னரும் சூட்டிறைச்சியும், தேறலும், மெல்லிய ஆடையும், பொன்