பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

ஆணும் பொருளு நல்கியுள்ளார். இப் புலவர் பெற்ற ஆடை, "பாம்பு உரித்தன்னவாள் பூங்கலிங்கம்" அதாவது அத்துணை மென்மையான ஆடை என்பது பொருள்.

வெள்ளைக்குடி நாகனார் புலவராயினும் குடிப்பிறப்பில் வேளாண் இனத்தவர். இவரால் விளைவுக் குறைவு காரணமாக நிலத்துக்கும் கொடுக்க வேண்டிய வரியினைச் செலுத்த இயலவில்லை. ஆகவே, தம் குறையினைக் கிள்ளிவளவனிடத்தில் கூறிக் கொண்டு தாம் வரியினைச் செலுத்த இயலாமையை அறிவிக் கத்தொடங்கினர். அதுபோது, "மன்னா! அரசு எனப்படுவது நினதே. நாடு எனப்படுவதும் நினதேயாகும். எம் மன்னர், குடிமக்களின் குறைகளைக் கேட்கச் செவிசாய்க்கின்றனரோ, அவர்கள் தம் நாட்டில் வேண்டியபோது மழையைப் பெறுவர். நீ பெற்றுள்ள வெண் கொற்றக்குடை, வெயில் மறைப்பதற்கு மட்டும் அமைந்தது அன்று. குடிகளையும் தன்கீழ் அழைத்துத் தண்ணிழல் செய்வதற்குமாகும். படை வீரரது வெற்றிக்குக் காரணம் உழவர் உழுது நெல் விளைவிப்பதனலே என்பதையும் உணர்க. மழை பெய்யாது போயினும், விளைவு குறைந்துபோயினும், மக்கள் அரச னைத்தான் குறை கூறுவர். ஆகவே, நீ உழவர் குடியினை ஒம்புவாயாக, அப்படி ஒம்பினால் உன் பகைவர் உன்னடி வணங்குவர் ' என்று

அறிவுரை பகர்ந்தனர். உழவர் சிறப்பினைக்