பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49


அமைந்த வீரமாகும். அவ்வீரனை அணுக அஞ்சிய கூற்றுவன், தான் ஒர் இரவலன் போல் இருந்து கிள்ளிவளவனை அணுகி உயிரை இரந்து இருக்கவேண்டும். கிள்ளிவளவன் இல்லையென்னது ஈயும் கடப்பாடு உடையவர். ஆதலின், தம் உயிரை ஈந்திருக்க வேண்டும். இதுவே, கிள்ளிவளவர் உயிர் உடலை விட்டுப் பிரிந்தமைக்குக் காரணம்.” என்று கற் lபனை மலியக் கனிந்து பாடியுள்ளார் மாறோக் கத்து நப்பசலையார். ஆடுதுறை மாசாத்தனார், கிள்ளிவளவனைக் கொண்டு சென்ற இயமனை இழித்துப் பேசுகிறார், ' கூற்றுவ ! உனக்கு அறிவில்லை ; உன் நெஞ்சில் அன்பும் இல்லை. இதற்குக் காரணம் கூறுகிறேன் கேள்; எவரேனும் உணவு இல்லை என்ற காரணத்தால் விதை நெல்லைச் சமைத்துச் சாப்பிடுவார்களா ? அந் நெல் இருந்தால்தானே மேலே விளைவித்து உண்டு வாழ இயலும் ? அது போலக் கிள்ளிவளவன் உயிருடன் இருந்தால் தானே, அவன் பகைவரை வென்று வென்று உனது பசியினைப் போக்குவன். இப்போது உன் பசியினைப் போக்குபவனைக் கொன்று விட்டனையே. இனி உன் பசியினைத் தணிப்பவர் யார்?என்று வினவுகிறார். இப்புலவர் இயமனை நோக்கிக் கூறிய சுடு சொற்கள் நனி பேதையே நயனில் கூற்றம் ! விரகின்மையின் வித்தட்டு உண்டனே" என்பன.