பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

யர் குலத்தில் பெண் கொண்டனன். அவ்விடையர்குல மாதுடன் இன்புற்று இல்லறம் நடத்தும் காலத்து, அம்மாது கருவுற்று ஒர் ஆண் மகவை ஈன்றெடுத்தனள். அம் மகன் ஆயர் குல மரபும், பாண்டியர் குல மரபும் ஆகிய இரு மரபுகளும் கலந்த நிலையில் பிறந்தவன் ஆதலின், அவனுக்கு வேறு எத்தகைய பெயரையும் சூட்டி அழைக்காமல், இரு மரபின் பெயர்களும் அமைந்த நிலையில் அண்டர் மகன் குறுவழுதி என்றே அழைக்கப்பட்டு வந்தான். அண்டர் என்பார் இடையர். வழுதி என்பது பாண்டியன் என்னும் பொருள் தரும் சொல். ஆகவே, இரு மரபுகளின் பெயர்களை இணைத்தே அண்டர் மகன் குறுவழுதி என்று கூறப்பட்டனன். அம் மகன் வளர்ச்சி அடைய வேண்டிய அளவு வளர்ச்சி பெறாமல், குறுகி இருந்தமையால் குறுவழுதி என்று அழைக்கப் பட்டனன் போலும் !

இவ்வண்டர் மகன் குறுவழுதி இளமை முதற்கொண்டே கல்வியில் ஆர்வம் கொண்டு தீந்தமிழ் மொழியில் காணும் இலக்கண இலக்கியங்களை நன்கு ஓதிப் பயின்று வந்தனன். இப்பயிற்சியே பின்னல் பெரும் புலவர்களில் ஒருவனுய் இருக்கும் வாய்ப்பினைத் தந்தது. ஆகவே, இனி இவனைப்பற்றிக் கூறப்படும் போது மரியாதையாகவே கூறுதல் வேண்டும். இதற்குச் சான்றாக இவன் பின்னல் குருவழுதி யார் என்று மரியாதையாகக் குறிக்கப்பட்டு