பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54


அம் காதலனைப் பார்த்து, "நீ இரவிலும் இங்கு வந்து இல்லத்தில் தங்கித் தலைமகளை விட்டுப் பிரிந்து போதல் கூடாது' என்பதை வற்புறுத் திக் கூறுவதாகும். இப்படிக் கூறும் போது தோழி அத்தலைவனிடம் நாகரிகமான முறையில் கூறித் தங்குமாறு பேசியதுதான் நாம் இங்குப் பாராட்டற்குரியது. தலைமகனை நோக்கி நீ இங்கு இரவு தங்கித்தான் போக வேண்டும் ' என்று வன்மை மொழியால் கூறாமல், ' இங்கு இரவு தங்கிப் போவதில் தவறு உண்டாகுமோ?’ என்று வினவுடன் கலந்து கூறினாள். இவ்வாறு வினயமாகக் கூறினல், எவர்தாம் இணங்காது எதிர்த்துப் பேசுவர்? இத்துடன் இத் தோழி நீ இரவு நேரத்தில் இவண் வருவது எவரும் அறிதல் கூடாது என்பதையும் சமத்காரமாக ' வரை மருள் நெடுமணல் தவிர்ந்து நின்று அசைஇ" என்று பேசியதாகப் புலவர் கூறுகிறார். அதாவது, தலைவா! உன் தேரை மலையும் மருளும்படி மணல் குவிந்து மலைபோல் காணப்படும் மணல் குன்றுகளின் பின் மணல் பரப்பில் நிறுத்தி விட்டு வருக" என்பதாம்.

அகநானூற்றில் காணப்படும் செய்யுட் களில் இப்புலவர் கூறும் கருத்துக்கள் சில. அவற்றுள் ஒன்றில் தலைவியைக் கூடிச் செல்லும் தலைவனிடம் தோழி, தலைவ, நீ இப்படிப் பிறர் அறியா வண்ணம் வந்து செல்வது கூடாது. உன் காதலிக்கு நாளுக்கு