பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

10. பாண்டியன் ஆரியப்படை
கடந்த நெடுஞ்செழியன்

செழியன் என்னும் சொல் பாண்டியரைக் குறிக்கும். இங்குக் கூறப்பட்ட பாண்டிய மன்னர் தோற்றத்தால் நீண்டு வளர்ந்து காணப்பட்ட காரணத்தால் நெடுஞ் செழியர் என அழைக்கப்பட்டனர் எனலாம். இவர் வடவர்களாகிய ஆரியரோடு எதிர்த்துப் போரிட்டு அவர்கள் படையினைப் புறமுதுகு காட்டி ஓடுமாறு செய்தவர். இதனால் இவர் ஆரியப் படை கடந்த நெடுஞ் செழியன் என்ற சிறப்பு மொழிகளால் சிறப்பிக்கப்பட்டனர். கடந்த என்னும் மொழி எதிரிட்டு வென்ற என்னும் பொருளைத் தந்து நிற்கும். இவர் தோற்றப் பொலிவின் காரணமாக நெடுஞ் செழியர் என்று அழைக்கப் பட்டாரே னும், பாண்டியர் குடியினர் என்பதைத் தெற் றெனத் தெளிவிக்கப் பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ் செழியன் என்று குறிப்பிடப்பட்டார்.

இப் பாண்டியரே கோவலனை ஊழ்வலி காரணமாகக் கொல்லுவித்தவர். என்றாலும், குற்றத்தை உணர்ந்து அக் குற்றம் செய்த காரணத்தால் உம் உயிரையும் விடுத்துத் தம் நீதி நெறியினை நிலை நாட்டியவர். இல்லையானால்