பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

டுடன் கூட்டி அதன் சிறப்பையே தம் சிறப்புக்கு அறிகுறியாகப் பெயரை அமைத்துக் கொண்டதிலிருந்து தெற்றெனத் தெரிய வருகிறது.

இவரது நண்பர்கள் மையல் என்னும் ஊரிலிருந்த மாவனும் எயில் என்னும் ஊரில் இருந்த ஆந்தையும், அந்துவஞ்சாத்தனும் ஆதனழிசியும், இயக்கனும் ஆவர். இயக்கன் மிகுந்த கோபம் உடையவன் போலும் ! அவனைப்பற்றி இப்புலவர் கூறும்போது வெஞ்சின இயக்கன் என்றே கூறியுள்ளார். ஆந்தை என்னும் பெயரில் மற்றொரு புலவர் ஒருவரும் இருந்திருக்கிறார், அவர் கோப் பெருஞ் சோழனது நண்பர். பிசிர் என்னும் ஊரினர். அவர் இப்பாண்டியன் நண்பர் அல்லர். அவரினும் இந்த ஆந்தை வேறு என்பதற்காகவே ஆந்தையார் என ஆர் என்னும் மரியாதைப் பன்மை விகுதி கொடுத்துப் பேசப்படாததோடு, எயில் என்னும் ஊரைச் சார்ந்த ஆந்தை என்று குறிக்கப்பட்டதை நினைவுபடுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் என்னும் அரசப் புலவர்க்கு வாய்த்த இல்லக்கிழத்தி யாரும் மிகுந்த ஏற்றமுடையவர். இவ்வம்மையார் பெருங் கற்புடையவர் என்று கூறப்படுவதோடல்லாமல் கவிபாடும் சிறப்பும் பெற்றவர். இவ்வம்மையார்க்குக் கணவன் மாட்டு இருந்த அன்பினைத் தம் கணவனார்