பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62


இவ்வஞ்சின மொழிகளில் பல உண்மைக் கருத்துக்கள் வெளியாகின்றன. இவர்தம் மனையாளிடம் மிகுந்த அன்பு கொண்டு இன்புற்ற காரணத்தால் அம்மனையாளைப் பிரிய இயலாத வாழ்க்கை நடத்தி வந்தவர் என்பது தெரிகிறதல்லவா ? இத்தகையாளைப் பிரிதல் இயலாமைக்கேனும் பகைவரைப் புறங்காண்டல் இவர்க்கு இன்றியமையாததாயிற்று. கொடுங்கோல் அரசை மிகவும் வெறுத்தவர் என்பதும் தெரிகிறது. நண்பர்களுடன் கூடிக் குலாவும் இயல்பினர் என்பதும் அக்குலாவலை இவர் இழக்க விரும்பிலர் என்பதும் தெரிய வருகின்றன. இவற்றினும் மேலாகத் தம் குடிப்பிறப்பில் மிகுந்த பெருமைகொண்டவர் என்பதும் தெரிந்துகொள்ள நேரிடுகிறது. இவ்வீற்றுக் கருத்தை விளக்கும் செய்யுள் அடியினை இதுபோது சிந்தித்தல் சிறப்பேயாகும்.

“மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
தென்புலம் காவலின் ஒரீஇப் பிறர்

வன்புலம் காவலில் மாறியான் பிறக்க”

என்ற அடிகளைக் காண்க.

இவர் பாடியுள்ள அகநானூற்றுச் செய்யுளில் இவரது நண்பனை திதியன் என்பவனை வாயாரப் புகழ்வது நாம் அறிந்து இன்புறுதற்குரியது. அவனைப்பற்றிக் கூறும்போது அவன் பகைவரை வெல்வதில் வீரன் என்றும், பொதியமலையில் வாழ்ந்த பெருஞ் செல்வன்