பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. பாலை பாடிய பெருங் கடுங்கோ


பாலை பாடிய பெருங் கடுங்கோ என்னும் அரசர் ஒரு புலவரே. இவர் அரசர் என்பதற்கு அறிகுறியாக இவரது பெயரின் ஈற்றில் கோ என்னும் சொல் நின்று சிறப்பிப்பதே காரணமாகும். கோ என்னும் சொல் அரசர் என்னும் பொருளைத் தந்து நிற்கும். இம் மன்னர் சேரர் குடியினர் என்பதைச் சேரமான் பாலை பாடிய பெருங் கடுங்கோ என்று குறிப்பிடப்படுவதினின்றும் உணரலாம். இவர் போரில் பகைவர் முன்னே கடுமையாக இருத்தல் பற்றிக் கடுங்கோ என்று அழைக்கப்பட்டனர் போலும்! அக்கடுமையும் சிறிதாக இராமல் பெரிதாகவே இருந்தது பற்றிப் பெருங் கடுங்கோ என்றே பேசப்பட்டார் என்றும் கருதலாம். "படுகளத்தில் ஒப்பாரி ஏது?" ஆனால், போர்க்களத்தில் பகைவர் முன்பு தான் இந்தக் கடுமை இருந்ததே அன்றி, இரவலர் முன்பு இந்தக் கடுமையினைக் காண முடியாது. ஏனெனில், இவரைப் பற்றிப் பேய் மகள் இள எயினி என்னும் புலவர் பெருமாட்டியார் பாடுகையில், மகளிர் சிற்றில் இழைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது பதுமைகட்கு மலர்களைப் பறித்துத் தந்தவர் என்றும், தம்மைப்பாடிய பாடினுக்கு அணி