பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64


12. கடலுள் மாய்ந்த
இளம் பெருவழுதி

வழுதி என்பது பாண்டியரைக் குறிக்கும் மொழி. ஆகவே, இப்புலவர் பாண்டிய மரபினர் என்பதை அறிகிறோம். இவர் பெருவழுதி என்று குறிப்பிடப்பட்ட காரணத்தால் பெருமைக்கும் உறைவிடமானவர் என்பதும் தெரியவருகிறது. இளமை அழகு திகழப் பெற்றமையால் இளம்பெருவழுதி ஆயினார் போலும்! இவர் கடலில் பயணப்பட்டபோது அங்கேயே இறந்த காரணம் பற்றிக் கடலுள் மாய்ந்த என்ற அடை கொடுக்கப்பட்டுக் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்று அழைக்கப்பட்டனர். ஆர் விகுதி கொடுத்துக் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதியார் என்றும் குறிப்பிடப்பட்டும் வந்துள்ளார். இளம் பிராயத்திலேயே இவர் பேர் அறிவினராகத் திகழ்ந்துள்ளார். மரியாதை பெற்றவராகவும் கருதப்பட்டார்.

இவர் பேர் அறிவினர் என்பதை விளக்க இவரால் பாடப்பட்ட புறநானூற்றுச் செய்யுள் ஒன்றும், நற்றிணைச் செய்யுட்கள் இரண்டும் பரிபாடல் ஒன்றும் சான்றாக உள்ளன.

புறநானூற்றுப் பாடல் அரிய பெரிய நீதியை விளக்கும் நிலையில் உள்ளது. பரோபகாரம் செய்யவேண்டிய இன்றியமையா