பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68


13. பாண்டியன் அறிவுடை நம்பி

தமிழ் இலக்கணத்தில் விகுதிபெற்ற ஆண்பாற் பெயர்களும், விகுதிபெறாத ஆண்பாற் சிறப்புப் பெயர்களும் உண்டு. அவை விடலை, நம்பி, வேள் முதலியன. அத்தகைய சிறப்புப் பெயர் உடையர் இப்பாண்டியர் குலப்பாவலர் என்பதற்காகவே நம்பி என்ற சொல்லாலேயே குறிக்கப்பட்டுள்ளார். இவரது சிறப்பு மற்றைய ஏனைய காரணங்களால் அமைந்தது என்றாலும், அறிவு காரணமாகவே இவர்க்கு அமைந்த சிறப்பாகும் என்னும் காரணத்தை முன்னிட்டடே அதனை நன்கு விளக்கமுறத் தோற்றுவிக்கவே அறிவுடை நம்பி என்று அடைகொடுத்தும் மொழியப்பட்டார். இவ்வறிவுடை நம்பி பாண்டியர்குலப் பார்த்திபர் என்பதை அறிவிக்கப் பாண்டியன் அறிவுடை நம்பி என்று சிறப்பிக்கப்பட்டனர். பாண்டியன் என்பதனால் அரச இனத்தினர் என்பதும் அறிவுடை என்றதனால் அறிஞர் இனத்தினர் என்பதும் நாம் அறிந்து இன்புறுதற் குரியனவாகும். இத்தகைய பெருமைசான்ற புரவலர்ப் புலவரைப் பாடிய புலவர் பெருமான் பிசிராந்தையார் என்பவர். பாண்டியன் அறிவுடை நம்பி தாமே அறிவு சான்ற பெருமகனாராக இருந்தும், புலவர் பெருமக்கள் கூறும் அறவுரைகளை அகங்குளிரக் கேட்டு அதன்படி நடக்கும்