பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70


பெற்று அரசர் அரசு புரிதல் தக்கது" என்று அறிவுறுத்தியுள்ளார். இத்துணைக் கருத்துக்களையும் புலவர் பிசிராந்தையார் கூறிய பாடலில் படித்து இன்புறும் ஒரு பகுதி,

"யானை புக்க புலம் போலத்

தானும் உண்ணான் உலகமும் கெடுமே"

என்னும் அடிகளே என்க.

இத்தகைய மாண்புடைய புலவர் பெருமானின் அறவுரைகளைச் செவி சாய்க்கும் அர சப்புலவர் அறிவு சான்றவராய் அருங்கவி புனையும் ஆற்றல் பெறாது இருப்பாரோ? ஒருக்காலும் இரார். ஆகவே, இவரும் ஒரு செய்யுளினைச் செய்துள்ளார். அது புறநானூற்றில் மிளிரும் செய்யுளாகும். அப்பாடல் பிள்ளைப் பேற்றின் மாண்பினை நன்கு எடுத்து மொழிவது. இப்புலவர் பெருமானுக்கு எந்தக் கருத்திலும் தம் மனம் செல்லாது புத்திர பாக்கியத்தின் பெருமையினைக் கூறக் கருதியது ஒரு சிறப்புத்தான். இவர் பெருஞ் செல்வம் உடைமையைக் கூடப் பெருஞ் சிறப்பாகக் கருதிலர். அச்செல்வம் காரணமாகப் பலரோடு உண்டு களிக்கும் களிப்பினையும்கூடச் சிறப்பாகக் கருதிலர். ஆனால், பலரோடு உண்ணும் காலத்துத் தத்தித்தத்தி நடந்து வந்து, தம் சிறிய கையை நீட்டி உண்கலத்தில் வைக்கப்பட்ட உணவில் கையை வைத்து அவ்வுணவை எடுத்துத் தரையில் சிதறி அதனைப் பிசைந்து, வாயால், கவ்வி மீண்டும் கையால் துழாவியும்